புதிய 1 ரூபாய் கரன்சி விரைவில்
புதிய 1 ரூபாய் கரன்சியை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளது. இந்த நோட்டு வெளிவந்த பின் 1 ரூபாய் நாயணங்களும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அர்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
புதிய 1 ரூபாய் கரன்சி நோட்டுக்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நோட்டில் H சின்னத்துடன், உட்பொதிந்த L எழுத்துக்கள், நோட்டின் முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சை நிறமும், பின்பகுதியில் மற்ற நிற கலவையிலும் இருக்கும்.
எண்களானது நோட்டின் வலது கீழ்ப்புறம் கருப்பு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இவற்றோடு ரூபாயின் மதிப்பானது 15 இந்திய மொழிகளிலும், நோட்டின் மையப்பகுதியின் கீழ்ப்புறம் சர்வதேச எண்ணில் ஆண்டு இருக்கும்.
மேலும் இந்த புதிய நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பின்னும் நாயணங்களும் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.