செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By

இயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் ஈஸ்டர் திருநாள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவு கூறும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் நாளை கொண்டாடுகின்றனர்.
இயேசு தன்னைக் கடவுளின் மகன் என்றும், “என்னைகண்டவன் பிதாவைக்கண்டவன். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,” என்று  உபதேசம் செய்து வந்தார்.
 
“நான் மரித்த பின்மீண்டும் உயிர்த்தெழுவேன்,'' என்று அவர் கூறினார். அதுபோல, அவர் மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இந்த நிகழ்ச்சியைக் கண்ட சீடர்கள், இவரே கடவுள் என்று உலகம் முழுவதும் பிரசங்கம் செய்தனர். அவர் உயிர்த்தெழுந்த நாளே, ஈஸ்டர்  திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இயேசுவைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின்படி கி.பி.27-33-இல் சிலுவையில் ஏசு அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுவது உயிர்த்த ஞாயிறு அல்லது பாஸ்கா.
 
இது கிறிஸ்துவ ஆண்டில் மிக முதன்மையான திருநாளாகும், இந்நாள் புனித வெள்ளிக்கிழமையிலிருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை  கொண்டாடப்படுகிறது. ரோம் கத்தோலிக்கத் திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாகும்.