1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2016 (18:03 IST)

6வது மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை!!

இந்திய கடற்படையில் சமையல் மற்றும் சுகாதார பணிகளுகக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


 
 
இதற்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்களும், 6 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
 
விண்ணப்பதாரர்கள் 1-10-1996 மற்றும் 30-9-2000 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு (மெட்ரிகுலேசன்) தேர்ச்சி பெற்றவர்களும், 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 
ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
 
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.
 
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். http://www.joinindianavy.gov.inஎனும் இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பங்களில் சரியான தகவல்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 2-1-2017. விரிவான விவரங்களை www.joinindianavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.