திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala

நோய்களை குணமாக்க உதவும் மூலிகை பொடிகள் !!

நமது ஆயுர்வேதத்தில் பெரும்பாலான மருந்துகள் பொடியாகவோ, சூரணமாகவோ, தைலங்களாகவோ, வேர்களாகவோ இருக்கும். இவ்வனைத்தும் பக்கவிளைவுகள்  ஏதுமின்றி நமது உடலை நோயின் பிடியிலிருந்து படிப்படியாக நீக்கவல்லது. 

மூலிகைகள் நோய்களை குணமாக்க தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பல்வேறு நோய்களுக்கு நூற்றுக்கணக்கான பாரம்பரிய வைத்தியக்  குறிப்புகள் உள்ளன
 
அருகம்புல் பொடி -  அதிகபடியான  உடல் எடை மற்றும்  கொழுப்பை குறைக்க வல்லது. இது சிறந்த ரத்தசுத்தி
 
நெல்லிக்காய் பொடி -  வைட்டமின் “சி” நிறைந்த இப்பொடி பற்கள் எலும்புகள் பலப்படும்.
 
வேப்பிலை பொடி - குடல் புழு,  உடல் அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
 
தூதுவளை பொடி -  நாள் பட்ட இருமல், சளி, ஆஸ்துமா போன்றவற்றிற்கு சிறந்தது.
 
ஆவரம்பூ பொடி - சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து அதுமட்டுமல்லாது உடலை  பொன்னிறமாக்கும் வல்லமை கொண்டது.
 
ஓரிதழ் தாமரை பொடி - ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை,  வெள்ளை படுதல் போன்ற அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாகும்.
 
அமுக்கரா பொடி -  உடல் எடை கூட்ட  வல்லது . மலட்டு தன்மையை நிக்க வல்லது.
 
வெந்தய பொடி -  உடல் சூடு தணியும், வாய் புண், வயிற்றுபுண் ஆற்றும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து.
 
வல்லாரை பொடி -  படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலை தர வல்லது. மேலும் நரம்பு தளர்ச்சி சிறந்தது.
 
கறிவேப்பிலை பொடி - ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது, தலை முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர்சியினை தர கூடியது. கண்பார்வைக்கும் சிறந்தது.
 
வில்வம் பொடி -  உடலில் உள்ள கெட்ட  கொழுப்புகளை குறைத்து  இரத்த கொதிப்பு வராமல் பாதுகாக்கும்.
 
நாயுருவி பொடி -  உள் மற்றும் வெளி மூலத்திற்க்கும்,  நவ மூலத்திற்க்கும் சிறந்தது.