வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 3 ஏப்ரல் 2014 (16:56 IST)

உக்ரைன் நாட்டை போண்டியாக்கும் IMF

உக்ரைன் கீய்வில் நடைபெற்று வரும் ஆர்பாட்டங்கள் உண்மையில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிடும் ஆர்பாட்டமே.
 
உக்ரைன் - ரஷ்யா எல்லையில் நேட்டோ ராணுவ முகாம்களை அமைத்து மேற்கு நாடுகளின் சுரண்டல்களை பெரிய அளவுக்கு நடத்திக் கொடுக்கும் உலக நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கண்டிப்பான (எளிமையானது போல் ஆபத்பாந்தவன் போல் காட்டிக்கொள்ளும்) நிதி திட்டங்களை உக்ரைன் மீது திணிக்கும் நடைமுறை ஏற்கனவே துவங்கி விட்டது.
 
அமெரிக்க/நேட்டோ படைகளை உக்ரைன் - ரஷ்ய எல்லையில் நிறுத்துவதன் மூலம் ஐ.எம்.எஃப் என்ற உலக நிதியத்தின் திட்டங்களை அங்கு திணிக்கும் நடைமுறை தொடங்கிவிட்டது.
 
மேலும் நேட்டோ படைகளை அங்கு கொண்டு செல்வதன் மூலம் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்கள் தொகை உள்ள பகுதிகளை புடின் ஆக்ரமிப்பு செய்ய நெருக்கடியும் ஏற்படும்.
 
அரசியல் மற்றும் புவியியல் விவகாரங்கள் அங்கு ஒரு தீர்வுக்கு வரும் முன்னரே உக்ரைனை பொருளாதார ரீதியாகச் சுரண்டும் நடவடிக்கை அங்கு தொடங்கி விட்டது.
 
உக்ரைன் மக்கள் ஐ.எம்.எஃப். பில்லியன் டாலர்கள் தொகையை அங்கு வந்து கொட்டி உக்ரனை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றிவிடும் என்று அப்பாவி நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால் உண்மை என்னவெனில் ஒரு பில்லியன் டாலரைக் கூட உக்ரைன் மக்கள் பார்க்கப்போவதில்லை. மேற்கத்திய வங்கிகளுகு உக்ரைன் பட்ட கடனை ஐ.எம்.எஃபிற்கு பட்ட கடனாக மாறும் என்பதை உக்ரைன் மக்கள் அறியவில்லை.
இது நடந்து விட்டதெனில் உக்ரைனைப் போண்டியாகும் நடவடிக்கைத் தொடங்கும். அதன் பிறகு உக்ரன் அரசுக்கு ஐ.எம்.எஃப் தனது நிபந்தனைகளை விதிக்கும்.
 
அதாவது வயதானவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூஉதியத்தை குறை என்று கூறும். அரசு சேவைகளில் வேலையில் உள்ளோர், வேலை வாய்ப்பு, மற்றும் பல்வேறு மானியங்கள் ஆகியவற்றை முற்றிலும் நீக்குமாறு ஐ.எம்.எஃப். நிபந்தனை விதிக்கும். இயற்கை எரிவாயு உள்ளிட்ட மக்கள் தேவைக்கான அன்றாடப் பொருட்கள் மீதான மானியங்களை அடியோடு ஒழிக்க வலியுறுத்தும்.
 
மேலும் உக்ரைனின் பொதுச் சொத்துக்கள், உக்ரைனில் உள்ள தனியார் தொழிற்துறைகளை மேற்கத்திய முதலாளிகளுக்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
 
கூடுதலாக உக்ரைன் தனது நாட்டுப் பணத்தை சந்தையில் விடவேண்டிவரும். தங்கள் நாட்டு பண மதிப்பு மிகவும் தாழ்வாக செல்ல தடுப்பது கடினமாகும், இதனால் இறக்குமதி விலைகள் அதிகரிக்கும், இதனைத் தடுக்க அன்னியச் செலாவணை சந்தையில் உக்ரைன் மேலும் கடன் வாங்க நேரிடும். மேலும் உக்ரைன் கடனில் மூழுகும் நிலை ஏற்படும்.

ஊழல் அதிகரிக்கும், இறையாண்மை காலியாகிவிடும், பொருளாதாரக் கொள்கை அடியோடு மேற்கத்திய நாடுகளின் கைகளுக்குள் சென்று விடும். உக்ரைனிய பொது மற்றும் தனியார் சொத்துக்கள் மேற்கத்திய நலன்களுக்கு தாரை வார்க்கப்படும்.
 
நேட்டோவுடன் உக்ரைன் உறவு வைத்துக் கொண்டால் மேலும் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை சந்திக்க நேரிடும். இதனால் உக்ரைனில் உள்ள ரஷ்ய உறவினர்கள் ரஷ்யாஇல் உள்ள உக்ரைன் உறவினர்களுக்கு இதனால் பெரும் துன்பம் ஏற்படும். 200 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும் ரஷ்யா உக்ரைனை பிரித்து மேற்கத்திய நாடுஅகள் சுரண்டலை கட்டவிழ்த்து விடுவதும், அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கான வேட்கையும் உண்மையில் வெட்கக் கேடானது, மிகப்பெரிய குற்றமும் கூட.
 
இன்று ஜனநாயக உக்ரைன் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் இத்தனையும் நடந்து முடிந்த பிறகு வாழ்நாள் முழுதும் தங்கள் காரியத்திற்காக வருந்த நேரிடும்.
 
ஐ.எம்.எஃப். இவ்வளௌ கொடுமைகளையும் பல நாடுகளுக்கு செய்துள்ளது வரலாறு. இருந்தும் ஏன் நாடுகள் அதைச் செய்கின்றன எனில் அரசியல் தலைகளை பணத்தினால் கவிழ்த்து விடுகின்றனர். ஊழல்களை வளர்த்து மேற்கத்திய நாடுகள் பயன் பெற்று வருகின்றன.
 
உக்ரைனில் ஐ.எம்.எஃப். ஏற்கனவே செய்த வேலைகளில் சிலவற்றை பார்ப்போம்:

உக்ரைன் தேசிய வங்கியின் ஆளுனர் ஐஹோர் சோர்கின் பிப்ரவரி 25ஆம் தேதி நீக்கபட்டு பதிலாக ஸ்டீபன் குபிவ் என்பவரை நியமித்துள்ளது.
 
புதிய நிதி அமைச்சர் அலெக்சாண்டர் ஷ்லபாக், முன்னாள் வலதுசாரி  விக்டர் யஷ்சென்கோவின் கையாள். யஷ்சென்கோ ஐ.எம்.எஃப்.-இன் சிறந்த தூதர்.
 
மிக முக்கியமாக தற்போதைய இடைக்கால அரசின் வேளாண் கொள்கை மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஐஹோர் ஸ்க்வைகா என்பவர் நியோ-நாஜி ஆவார். இவர் மானியம் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் பிற நலன்களை 'கவனித்துக் கொள்வார்'
 
ஐ.எம்.எஃப்.இன் தேவை என்னவெனில் உடனடியாக வீட்டு உபயோக சமையல் எரிவாயுவிற்கு வழங்கப்படும் மானியத்தை 50% குறைப்பதாகும்.
 
1994ஆம் ஆண்டு ஏற்கனவே பின்னால் அதிபரான யஷ்சென்கோ உக்ரைன் மத்திய வங்கி தலைவராக இருந்தபோது, பிரட் விலை ஒரே இரவில் 300% அதிகரித்தது.
 
மின்சார கட்டணங்கள் 600% அதிகரித்தது.
 
பொது போக்குவரத்துக் கட்டணங்கள் 9000% அதிகரித்தது.
 
7 ஆண்டுகளில் கூலி 75% குறைந்தது.
 
வாழ்க்கைத் தரம் கடுமையாக பலவீனமடைந்தது.
 
இப்போது இடைக்கால அரசு இருக்கிறது அங்கு என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? உக்ரைன் மக்களை நினைத்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.