புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (20:22 IST)

டிராக்டரில் ஏற முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் !

மணப்பாறை அருகே உள்ள பண்ணைத் தோட்டத்தில் ஒரு சிறுவன் டிராக்டரில் ஏற முயன்று அதன் கலப்பையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நல்லம்ம நாயக்கன்பட்டி கிரமத்தில் வசித்து வருபவர் துரைக்கண்ணு. இவரது மகன் மூவேந்திரன்.

நேற்று இரவு தனத் தோட்டத்திற்கு சென்ற துரைக்கண்ணு தனது மனம் மூவேந்திரனை அழைத்துச் சென்றார்.

பின்னர் காலையில் டிராக்கட் மூலம் நிலத்தை உழும் பணி நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த மூவேந்திரன் டிராக்டரில் ஏற முயன்று கலப்பையில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

இதில் மூவேந்திரன் ரத்தவெள்ளத்தில் உடலில் காயங்களுடம் நிலத்தில் விழுந்ததுள்ளது தெரியவந்தது. அதன்பிறகு அருகில் உள்ளவர்கள் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.