வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2024 (15:03 IST)

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Train
பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். அதிலும், பண்டிகை நாட்களில் முன்பதிவு துவங்கிய உடனேயே டிக்கெட்டுகள் தீர்ந்து போய்விடும். டிக்கெட் முன்பதிவு செய்தாலும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும். எனவே, டிக்கெட் உறுதியாகுமா என்பதே தெரியாமல் இருக்கும்.

இந்த தீபாவளிக்கும் ஏராளமான பேர் ரயிலில் பயணம் செய்தார்கள். அவர்களுக்கு பல சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளது. சென்னையை பொறுத்தவரை தீபாவளி விடுமுறை முடிந்து திங்கள் கிழமை கிளாம்பாக்கம் வரும் பயணிகளின் வசதிக்காக காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

தீபாவளி முடிந்து பேருந்து மூலம் திங்கள் கிழமை சென்னை கிளாம்பக்கம் பேருந்து நிலையத்திற்கு பலரும் திரும்புவார்கள். பேருந்துகள் கிளாம்பக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே செல்லும். எனவே, சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கும் செல்வதற்காக திங்கள் கிழமை அதிகாலை முதல் காட்டாங்குளத்திலிருந்து தாம்பரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

அதன்படி, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் திங்கள் கிழமை அதாவது 4ம் தேதி அதிகாலை 4 மணி முதல் சிறப்பு ரயில்கள் இயங்கும். மேலும், 4.30, 5, 5.45 மற்றும் 6.20 மணிக்கும் அடுத்தடுத்து ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மேலும், கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக பொத்தேரி ரயில் நிலையத்தில் 5 நிமிடம் ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.