''காசு வாங்கிய நீ ஓட்டுப்போட்டாயா ..''.வேட்பாளர் ஒட்டிய நோட்டீஸ்
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஓட்டிற்குப் பணம் கொடுக்கும் முறை நிலவி வருகிறது.
இதனால் தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள் பல கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகப் புகார் எழுந்தது. அத்துடன் டோக்கன் மற்றும் பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், பணம் பெற்றவர்கள் தனக்கு ஊஅட்டுப் போடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஒரு வேட்பாளர் தமிழகத்தில் ஒரு பகுதியில் காசு வாங்கிய நீ ஓட்டுப்போட்டாயா என ஒரு நோட்டீஸ் அடித்து ஓட்டியுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.