1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : புதன், 28 அக்டோபர் 2015 (13:39 IST)

ஏரிகளில் 90 சதவீத நீர் இல்லை: சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் இருப்பு 90 சதவீதம் குறைந்துள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


 

 
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதிய மழை பொழியவில்லை. இதனால், சென்னை குடிநீருக்கான ஆதாரங்களாக விளங்கும் செம்பரம் பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழாவரம் ஏரி உள்ளிட்டவற்றில் உள்ள நீரின் அளவு மிகவும் குறைவாக இருக்கின்றன.
 
அதேபோன்று சென்னையைச் சுற்றி அமைந்துள்ள போரூர் ஏரி உள்ளிட்ட சிறிய ஏரிகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் மிகவும் குறைந்து வறண்டு போகும் நிலையில் உள்ளன.
 
3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 205 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
 
 35 அடி உயரமும் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட பூண்டி நீர்தேக்கத்தில் 75 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.
 
3,330 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட புழல் ஏரியில...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

 மிகக் குறைந்த அளவாக 14 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 881 மில்லியன் கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகின்றது.
 
ஆக மொத்தம் 295 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.  இந்த நாண்கு ஏரிகளிலும் 90 சதவீதம் அளவுக்கு தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.


 

 
சென்னைக்கு தினமும் 894 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் தற்போது 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இது நாளுக்கு நாள் குறைய வாய்ப்புள்ளது.
 
இந்நிலையில், போரூர் ஐயப்பந்தாங்கல் பகுதியில் வசித்து வரும் சஞ்சய் குமார் என்பவர் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக ஐயப்பந்தாங்கலில் வசித்து வருகிறேன். வேலை முடிந்து தினமும் இந்த போரூர் ஏரியை கடந்துதான் போவேன்.
 
இந்த ஏரியில் தண்ணிர் இவ்வவு குறைவாக இருந்து பார்த்ததே இல்லை. இந்த ஆண்டு வெயிலின் அளவு மிகவும் அதிகம். அதனால் இந்த ஏரியில் தண்ணீர் படிப்படியாக குறைந்து தற்போது தரை தெரியும் அளவுக்கு குறைந்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தொடங்கிளள்ள நிலையில், குடி தண்ணீர் இல்லாமல் வாடும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது." என்று கூறினார்.
 
எனவே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வய்ப்புள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.