புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Modified: ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (17:00 IST)

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 22 ஆவது பட்டமேற்பு விழா

புகழ்பெற்ற எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் அங்கமான எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22 ஆவது பட்டமேற்பு விழா 8 ஆம் நாள் காலை 11.00 மணிக்குக் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள டி.பி. கணேசன் கலையரங்கில் நடைபெற்றது.
 
இக்கல்லூரி தலைசிறந்த கல்வியாளர் முனைவர் T.R.பாரிவேந்தர் அவர்களால் 1993-94 ஆம் கல்வியாண்டில் துவங்கப்பட்டது. தற்பொழுது 2600 மாணவர்களைக் கொண்டு 19 துறைகளில் 128 பேராசிரியர்களுடன் இயங்கி வருகிறது.
 
இளநிலை உணவக மேலாண்மைத்துறையைச் சார்ந்த செல்வன் K.R. ஜெய்குமார் (B.Sc.,IHM)) என்ற மாணவன் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னைப் பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் தேர்ச்சிப் பெற்றுள்ள 85க்கும் மேற்பட்ட மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 560 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
 
சிறந்த வளாக வேலைவாய்ப்புத்துறை அமைந்துள்ள இக்கல்லூரியில் கடந்த ஐந்தாண்டுகளாகத் தகுதிவாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவிகித வேலைவாய்பினை வழங்கி சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிறுவனம் இக்கல்வியாண்டில் 107 மாணவர்களுக்குக் கட்டணச் சலுகையும், 57 மாணவர்களுக்கு முழுக்கட்டணச் சலுகையும் வழங்கியது பெருமைக்குரியது. எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் எஸ்.ஆர்.எம் தொழில் நுட்ப நிறுவனத்தின் வேந்தருமாகிய முனைவர் T.R.பாரிவேந்தர் அவர்கள் தலைமையேற்று விழாவைச் சிறப்பித்தார்.
 
வரவேற்புரை – முனைவர் T.P. கணேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று அமைந்தார். சிறப்பு விருந்தினர் – மாண்புமிகு நீதிபதி முனைவர் சு. அனிதாசுமந்த் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம், சென்னை. இவ்விழாவில் நீதிபதி முனைவர் சு. அனிதா சுமந்த் அவர்கள் பட்டமேற்கும் மாணவர்களை வாழ்த்தி எதிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகளாகச் சிலவற்றை அறிவுறுத்தினார்.
நீங்கள் நவீனத்துவத்துடன் மரபுசார்ந்த அறிவினை முன்னெடுத்து தனித்துவமாக அனுகும்போது வாழ்வில் உச்சபட்ச அறிவினை எட்டமுடியும். என்னுடைய வாழ்வியல் அனுபவத்தில் (1997) ஆண், பெண் பாலின பாகுபாட்டில் எவ்வித வேறுபாடும் இன்றி செயலாற்ற தனித்துவ சிந்தனை மிக்க அறிவினை வெளிப்படுத்துவது அவசியம். இது இந்த சமூகத்தில் முன்னோடியாக நிற்க துணை புரியும். வாய்ப்புகள் அனைவருக்கும் பொதுவானவை அதனை பயன்படுத்தி உன் திறமையை நிறுபி.

இந்த சமூகம் என்பது பறவை போல அதில் இருசிறகினை ஆண், பெண்ணாக உருவகப்படுத்தி இருவரையும் சமமாக நோக்க வேண்டும் என்று விவேகானந்தர் கூறியுள்ளதை நாம் நோக்க வேண்டும் என்றார். எளிய சிந்தனை உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கும். இந்த உலகம் நேர்மையானவரை எதிர்பார்க்கின்றது என்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமேற்பு விழாப் பேருரை வழங்கினார்.
 
தலைமை – திருமிகு. முனைவர் T.R.பாரிவேந்தர் அவர்கள், நிறுவனர் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம். SRM கல்விக்குழுமத்தில் அங்கமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறந்து விளங்கி வருகிறது. இவர் மாணவர்களை என்றும் உயர்வான கற்பனை உன்னை உயர்த்தும், கடுமையான உழைப்பும், தனித்துவ சிந்தனையும் வாழ்வில் உன்னை மேம்படுத்தும் என்றார்.
 
முன்னிலை – முதல்வர் முனைவர் கே. சுப்புராம் அவர்கள் கல்லூரியின் ஆண்டறிக்கையை வழங்கினார். எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லூரி.