செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 மே 2020 (08:03 IST)

சச்சின் மற்றும் ரோஹித்துக்கு சவால் விடுத்த யுவராஜ் சிங்!

சச்சின் மற்றும் ரோஹித் ஆகியோருக்கு சமூகவலைதளம் மூலமாக யுவ்ராஜ் சிங் ஒரு சவாலை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா ஊரடங்கை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு கழித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் பேட்டின் பக்க விளிம்பால் பந்தை கீழே விழாமல் அடித்துக் கொண்டு இருக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில் இது போல செய்யுமாறு இந்திய அணியின் வீரர்கள் சச்சின், ரோஹித் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு சேலஞ்ச் செய்துள்ளார். கொரோனா காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இதுபோல பல சவால்களை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.