வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (18:29 IST)

’இன்னும் நிறைய சாதனைகள் செய்ய காத்திருக்கிறேன்’ - யூனிஸ் கான்

நான் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய காத்திருக்கிறேன் என்று பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
 

 
யூனிஸ் கான் இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போடியில் விளையாடவுள்ளார். அது அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி ஆகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுல் 100 டெஸ்ட் போட்டியை கடக்கும் 5ஆவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய காத்திருப்பதாக கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “எனது கனவாக இருந்தது இப்போது நிறைவேறியிருக்கிறது. எனெனில், நான் இதை விரும்பியிருந்தேன். நான் எனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பொழுது இந்த வடிவத்தின் சுவை எனக்கு பிடித்து விட்டது. அதற்கு பிறகு 100க்கும் மேற்பட்ட விளையாட வேண்டும் எனது கனவாக ஆகிவிட்டது.
 
நான் இன்னும் நிறைய சாதனைகளை அடைவேன் என்று நம்புகிறேன். வாழ்க்கையிலும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. 100ஆவது டெஸ்ட் போட்டியை அடைந்தது மிகவும் பெருமையாக உள்ளது. ஜாவத் மியான்தத் கூட 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாட 18 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். ஆனால், நான் 100 போட்டிகளை 15 ஆண்டுகளில் கடந்து விட்டேன்” என்றார்.
 
37 வயதாகும் யூனிஸ் கான் 2000ஆவது ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை துவங்கினார். இதுவரையில் அவர் 8ஆயிரத்து 594 ரன்கள் குவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் ஜாவத் மியான் தத்தின் சாதனையை முறியடிக்க இன்னும் 238 ரன்களே யூனிஸ் கானுக்கு தேவை.