1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (12:48 IST)

உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

இன்றைய உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி,  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேசம்.
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், தமிம் இக்பால், மகமதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், சாகிப் அல் ஹசன் அரைசதமடித்து கைகொடுக்க, வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில்  முதலில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மொர்டசா, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஸ்காட்லாந்து அணி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது. இதில் மெக்லியாடு 11 ரன்கள், ஹமிஸ் கார்டினர் 19 ரன்கள், மாட் 35 ரன்கள், மம்சன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அசத்தலாக ஆடிய கோட்ஜெர் தனது 2 ஆவது சதத்தை எட்டினார். எனினும் கோட்ஜெர் 156 ரன்கள் ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்தது.
பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடியது வங்கதேசம். தொடக்கத்திலேயே சர்க்கார் 2 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட இக்பால் 95 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் மகமதுல்லா 62 ரன் எடுத்து ஆறுதல் அளித்தார். பின் இணைந்த ரஹிம் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர்  சாகிப் அல் ஹசன் மற்றும் ரஹ்மான் ஜோடி இணைந்து வங்கதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் வங்கதேச அணி 48.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.