வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (12:23 IST)

உலகக் கோப்பை: 1 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி

இன்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூசிலாந்து பரபரப்பு வெற்றியை பெற்றது.
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் அசத்தி கொண்டு வருவதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. இதில் டாஸ் வென்று விளையாடிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 151 ரன்களை சேகரித்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹடின் மட்டும் 43 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். 
 
பின்னர் நியூசிலாந்து அணி சுலப இலக்கை நோக்கி விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கப்டில் மற்றும் மெக்கல்லம் நியூசிலாந்து அணியின் இன்னிங்சை தொடங்கினர். 14 பந்துகளை சந்தித்த கப்டில் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மீண்டும் அசத்தல் ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் மெக்கலம், 21 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

பின் மெக்கல்லம் 50 ரன்களில் வெளியேறினார். பின் வந்த டெய்லர், எலியட், ரோன்சி ஆகியோர் வரிசையாக ஏமாற்றினர். இதனால் ஆட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பொறுப்புடன் விளையாடிய வில்லியம்சன் 45 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகன் விருதை போல்ட் தட்டிச் சென்றார்.