வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (13:17 IST)

உலகக் கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்

இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியின் 17வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது. நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 210 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் ஹக் அதிகபட்சமாக 31 ரன்கள் சேகரித்தார். 
 
பின்னர் சுலப இலக்கை நோக்கி விளையாட தொடங்கியது ஆப்கானிஸ்தான் அணி. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாவேத் அகமதி மற்றும் மங்கல் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் அகமதி ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் தடுமாறிய மங்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் இணைந்த ஸ்டனிக்சாயும் பெரிதாக பிரகாசிக்காததால் 4 ரன்களில் வெளியேறினார். 
 
பின் வந்த ஷென்வாரி பொறுப்புடன் விளையாடி அணியை ரன்வேகத்தை உயர்த்தினார். மறுமுனையில் சிறப்பாக செயல்பட்ட அகமது அரை சதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த நபி, நஜிப் சட்ரன், தவ்லத் ஆகியோர் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் ஷென்வாரி மட்டும் போராடிக்கொண்டிருந்தார். மேலும் தனது அரை சதத்தை எட்டி வெற்றி பாதைக்கு வித்திட்டார்.
 
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை விளையாடிய ஷென்வாரி 96 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் 10 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹமீத் ஹசனும் ஷபூர் சட்ரனும் அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.