திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 18 மார்ச் 2023 (19:36 IST)

மகளிர் ஐபிஎல்-2023: உபி., வாரியர்ஸுக்கு 128 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்

இந்தியாவில் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு முதல் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், உபி, எதிராக மும்பை அணி 127 ரன்கள் சேர்த்துள்ளது.

மும்பையில்  உள்ள 2 மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், ஐந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இன்று மும்பை இந்தியன்ஸ்-  உபி., வாரியர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்து வருகிறது.

இதில்,டாஸ் வென்ற உபி., வாரியர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. எனவே மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.மும்பை அணியில் தொடக்க ஆட்ட வீராங்கனைகள் யாஸ்டிகா மற்றும் ஸ்கிவர் சொதப்பினாலும், அடுத்து வந்த மேத்யூத், ஹர்மன்பிரீத் சிறப்பாக விளையாடினர்.

எனவே, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. உபி., வாரியஸ் அணி சார்பில், சோபி 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா, ராஜேஸ்வரி தலார் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.,

128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உபி., வாரியர்ஸ் அணி ஆடவுள்ளது.