1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 ஜூலை 2018 (16:41 IST)

ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் சச்சின் இடம் பெறாதது ஏன்?

ஹால் ஆப் ஃபேம் என்பது ஐசிசி அமைப்பின் ஒரு உயர்ந்த பட்டமாகும். ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் வீரர்கள் இணைவது மிகப்பெரிய மரியாதையாக சர்வதேச வீரர்கள் கருதுகின்றனர். 
 
இந்த பட்டியலில் இதுவரை பிஷன்சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், அனில் கும்ப்ளே ஆகிய 4 இந்திய வீரர்கள் இணைந்திருந்த நிலையில், 5 வது வீரராக ராகுல் டிராவிட் பெயர் இணைக்கப்பட்டது.
 
ஆனால், அனைத்துவிதமான தகுதிகள் இருந்தும், ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் சச்சின் பெயரை ஐசிசி இன்னும் ஏன் இணைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐசிசியின் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இடம் பெறுவதற்கு சில விதிமுறைகள், தகுதிகள் உள்ளன. 
 
இதில் ஒரு தகுதியை மட்டும் சச்சின் இன்னும் முழுமையாக பெறவில்லை. அதாவது, ஒரு வீரர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்புதான், இந்த ஹால் ஆப் ஃபேம் பட்டியலுக்கு விண்ணப்பிக்க முடியும். 
 
சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013, நவம்பர் 16 ஆம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். எனவே, ஓய்வு பெற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நிச்சயம் சச்சினின் பெயர் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இணையும் என தெரிகிறது.