1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (12:42 IST)

முனாஃப் படேலுக்கு என்ன ஆயிற்று? அவரே கூறுகிறார்...

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்திய அணியின் வேகபந்து வீச்சில் முதன்மை வகித்தவர் முனாஃப் படேல், 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் முக்கியமான சில விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் முனாஃப். ஆனால் இன்றோ ஐபிஎல். ஏலத்தில் கூட அவரை எடுக்க ஆளில்லை. ஏன்? அவரே கூறுகிறார்...
"நான் ஐபிஎல். ஏலத்தில் விற்கப்படாமல் போவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் இன்னும் எனது பந்து வீச்சு மற்றும் உடல் தகுதியில் மேம்படவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் வெளிப்படையாக கூறவேண்டுமெனில் ஐபிஎல். கிரிக்கெட்டில் இல்லாதது பற்றி எனக்கு பெரிதாக மனதில் எதுவும் எழவில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் 100% பங்களிக்க விரும்புகிறேன், அந்த நேரத்தில் ஒரு போட்டி என்றுதான் நான் தீர்மானிக்கிறேன், எனது ஆட்டம் குறித்து எனக்கு திருப்திகரமாகவே உள்ளது.
ஒவ்வொரு முறை எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும்போதும் நான் 100% பங்களிப்பு செய்கிறேன், இதைக்கூறும்போது இந்திய அணியிலிருந்து நான் நீக்கப்பட்டது கொஞ்சம் ஏமாற்றமாகவே உள்ளது. காயங்கள்தான் என்னை அணியிலிருந்து விலக்கி விட்டது. விளையாடி மோசமாக ஆடியிருந்து நீக்கப்பட்டிருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும்.
 
இப்போது நான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன், பந்து வீச்சை மகிழ்ச்சியுட்ன செய்து வருகிறேன், உடல்தகுதி விஷயத்தில் இனி கறாராக இருப்பேன்.
 
என்று கூறினார் முனாஃப் படேல்.
 
கூடுதல் தகவல்: இந்திய தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் முனாஃப் படேலின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்.