புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:28 IST)

கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!

வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷை கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் மட்டுமே அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் 143 ரன்கள் இலக்கோடு விளையாடிய பங்களாதேஷ் முதலில் சிறப்பாக விளையாடினாலும், கடைசி கட்டத்தில் வழக்கம் போல சொதப்ப ஆரம்பித்தது.

இறுதிப் பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஸ்சல் சிறப்பாக வீசி ரன் கொடுக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.