மகளிர் கிரிக்கெட் -மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

மகளிர் கிரிக்கெட் -மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

K.N.Vadivel|
மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று மோதியது.
 
முதலில் பேட் ஆஸ்திரேலிய அணி பேட் செய்து, 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்தது. இதனையடுத்து, களம் கண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைக் குவித்து எடுத்து வெற்றிக் கனியை பறித்தது.
 
இதுவரை தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தி வெற்றிக் கோப்பையை தட்டிப் பறித்தது குறிப்பிடதக்கது. ஆட்ட நாயகி விருது ஆஸ்திரேலிய அணியைச் சார்ந்த ஹெய்லி மேத்யூஸ்-க்கு கிடைத்தது.


இதில் மேலும் படிக்கவும் :