கொக்கைனுக்கு அடிமையாக இருந்தேன்… முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வாசிம் அக்ரம் தான் கொக்கைனுக்கு அடிமையாக இருந்ததாக தனது சுயசரிதை புத்தகத்தில் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் வாசிம் அக்ரம். 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் கொக்கைன் போதைக்கு அடிமையாக இருந்ததாகவும், அந்த பழக்கம் தன்னுடைய முதல் மனைவி இறந்த பின்னர்தான் முடிவுக்கு வந்தது என்றும் அவர் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளதாக தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.