வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (20:08 IST)

கோலிக்கு மட்டும் அதிர்ஷ்ட தேவதை பக்கத்திலையே இருக்கும் போல...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 
 
கடந்த வாரம் விளையாட்டு அமைச்சகம் இன்று கேல் ரத்னா விருதுகள் மற்றும் இதர விளையாட்டு விருதுகள் பெறுபவர்களின் பெயர்  பட்டியலை வெளியிட்டிருந்தது.
 
இதில் இந்தியாவின் திறமையான மற்றும் முக்கிய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி மற்றும் மீராபாய் சானு ஆகியோரின்  பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது இந்த விருது வழங்கும் விழாவனது  குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு விருது வழங்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார். 
 
இந்தியாவில் இதுவரை  இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இந்த கேல் ரத்னா விருது பெற்றுள்ளார்கள். 2007ஆம் ஆண்டில் தோனி,மற்றும்  1997ஆண்டில் சச்சின் ஆகியோர் இந்த விருதை  பெற்றிருந்தனர். இந்த வரிசையில் கோலியும் தற்போது இணைந்துள்ளார்.

இந்த இளம் வயதில் கிரிகெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள கோலிக்கு  வெற்றி என்னும் அதிர்ஷ்ட்ட ’தேவதை அருகிலேயே’ இருக்கும் போலிருக்கிறது.