1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 11 டிசம்பர் 2014 (14:22 IST)

கோலியின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பவுன்சர்; பந்தை பலி தீர்த்து கோலி சதம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பவுன்சர் தாக்குதலுக்கிடையில் விராட் கோலி தனது 7ஆவது நிறைவு செய்தார்.
 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
 
பிறகு முதல் இன்னிங்க்ஸில் முரளி விஜய் 53 ரன்கள், புஜாரா 73 ரன்கள், ரஹானே 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் தொடர்ந்து ஆடிய விராட் கோலி ஆடிக்கொண்டிருக்கையில், மிட்சல் ஜான்சன் பவுன்சராக வீசய பந்தை தவிர்க்க முயன்றும், அது அவரின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது.
 
ஆனால் உடனடியாக அருகிலிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் விராட் கோலி அருகே பதறியடித்து வந்து அவரை தட்டிக் கொடுத்துச் சென்றனர். அதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், மிட்சல் ஜான்சனின் முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.
 

 
எப்போதுமே எதிர் அணியினரை பந்து வீச்சால் நிலைகுலையச் செய்யும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், இன்று கோலிக்கு அடிபட்டவுடன் வந்து ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
 
சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் பந்து தாக்கியதால் உயிரிழந்தார். அவரது மறைவு ஆஸ்திரேலிய அணி வீரர்களை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதை இதிலிருந்து அறிய முடிந்தது.
 
இதற்கிடையில், விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 7ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 184 பந்துகளை சந்தித்து 115 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்துள்ளது.