1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (19:18 IST)

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 10வது இடத்தில் வீராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
இதில் பேட்டிங்கில் சங்கக்காரா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி டாப்-10க்குள் நுழைந்துள்ளார். 774 புள்ளிகளுடன் விராட் கோலி 10ஆம் இடத்தில் உள்ளார். முன்னதாக விராட் கோலி 12ஆம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
909 புள்ளிகளுடன் குமார் சங்கக்காரா முதலிடம் வகிக்க 1 புள்ளி குறைவாக 908 புள்ளிகளுடன் டிவில்லியர்ஸ் 2ஆம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் 105 ரன்களை எடுத்ததன் மூலம் 22வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
 
டாப் 10 வீரர்களின் டெஸ்ட் தரவரிசை பட்டியல்:
 
சங்கக்காரா, டிவில்லியர்ஸ், ஹசீம் ஆம்லா, ஸ்டீவ் ஸ்மித், அஞ்சேலோ மேத்யூஸ், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டேவிட் வார்னர், யூனிஸ் கான், விராட் கோலி
 
டெஸ்ட் அணிகளின் தரவரிசை:
 
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஜிம்பாப்வே