Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விராட் கோலி ஒரு ஆஸ்திரேலியர்; மைக்கேல் கிளார்க்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:55 IST)
விராட் கோலியின் உதவேகமும், அணுகுமுறையும் அருக்குள் ஒரு ஆஸ்திரேலியர் இருப்பதையே காட்டுகிறது என மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இந்திய அணி டெஸ்ட் தொடர் முடிவடைந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாட உள்ளது. இந்தியாவுடன் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது.
 
இலங்கை தொடர் முடிந்த பின் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி ஒரு ஆஸ்திரேலியர் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஆஸ்திரேலியாவில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் களத்தில் மிக கடினமாக உழைத்து சவால் கொடுக்கிறார். அவரைப் பற்றி அறிந்தவர்கள், அவர் களத்தில் எந்த அளவுக்கு போராட்ட குணத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை உணர்ந்து இருப்பார்கள். இதே குணம்தான் ஒவ்வெரு ஆஸ்திரேலிய வீரர்களிடமும் உண்டு.
 
ஆஸ்திரேலியர்களிடம் காணப்படும் உதவேகமும், அணுகுமுறையும் விராட் கோலியிடம் நிறைய இருக்கிறது. சொல்லப்போனால் விராட் கோலிக்குள் ஒரு ஆஸ்திரேலியர் இருக்கிறார் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :