வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 15 டிசம்பர் 2014 (14:17 IST)

விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்று புரிந்த பல சாதனைகள்

விராட் கோலி கேப்டனாக பங்கேற்ற முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்தது உட்பட மேலும் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
 
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 517/7 ரன்களில் டிக்ளேர் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 444 ரன்கள் எடுத்தது.
 
நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. சனிக்கிழமை ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ததால், இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
 

 
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலு 4 டெஸ்டுகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இந்தப் போட்டியில் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது எட்டாவது சதத்தை அடித்தார். அவர் 175 பந்துகளில் 16 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 141 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். டெஸ்டு போட்டியில் தோல்வியுற்றாலும் விராட் கோலி பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
 
முதலாவதாக, கேப்டன் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த இரண்டாவது வீரர் விராட் கோலி என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் கிரேக் சேப்பல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்திருந்தார்.

இரண்டாவதாக, விராட் கோலி இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 256 ரன்கள் (115, 141) குவித்தார். இதன் மூலம், கேப்டன் பொறுப்பேற்ற முதல் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் நியூஸிலாந்தின் கிரகாம் டெளலிங் 244 ரன்கள் எடுத்திருந்தார்.

மூன்றாவதாக, கேப்டன் பொறுப்பேற்ற முதல் போட்டியில் அதிக ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் விராட் கோலி. இதற்கு முன் விஜய் ஹசாரே இங்கிலாந்துக்கு எதிராக 164 ரன்கள் அடித்திருந்ததே அதிகப் பட்ச ரன் குவிப்பாகும்.
 
நான்காவதாக, ஆஸ்திரேலிய மண்ணில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு வீரர் ஒருவர் ஒரே டெஸ்டில், இரு சதங்கள் அடித்தவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் 1961இல் ரோஹன் கன்ஹாய் இந்த பெருமையைப் படைத்திருந்தார்.
 
இவ்வாறு நேற்று பல சாதனைகளை விராட் கோலி படைத்தார்.