Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோல்வி அடைந்தாலும் கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி

Virat Kohli
Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 5 நவம்பர் 2017 (13:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பின்னர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து பழி தீர்க்கும் இந்திய அணியை வேட்டை ஆடியது. கொலின் முன்ரே அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
 
இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் மற்றும் ரோகித் ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து மூன்றாவது போட்டி வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி டி20 போட்டி தொடரை கைப்பற்றும். 
 
ஒருநாள் போட்டி தொடரிலும் இதே போன்ற சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய அணி டி20 போட்டி தொடரையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த பின் இந்திய வீரர்கள் ஒய்வு அறையில் விராட் கோலியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.


இதில் மேலும் படிக்கவும் :