திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 28 டிசம்பர் 2022 (15:37 IST)

கே எல் ராகுலிடம் இருந்து பிடுங்கப்பட்ட துணைக் கேப்டன் பதவி!

இலங்கை தொடரில் பல அதிரடி மாற்றங்கள் பிசிசிஐ தேர்வுக்குழுவால் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த தொடரில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்துள்ளது. டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த கே எல் ராகுலிடம் இருந்து அந்த பொறுப்பு விலக்கப்பட்டுள்ளது. டி 20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல ஒரு நாள் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.