ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 18 நவம்பர் 2023 (07:32 IST)

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பணியாற்ற போகும் நடுவர்கள் இவர்கள்தான்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை குஜராத் அகமதபாத் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான பயிற்சியில் இரு அணிகளும்  ஈடுபட்டு வருகின்றன.

2003 ஆம் ஆண்டு இரு அணிகளும் உலகக் கோப்பை இறுதியில் மோதின. அந்த போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது. அதற்கு பதிலளிக்க இந்திய அணி இந்த முறை தயாராக உள்ளது. இந்த போட்டியைக் காண 1.3 லட்சம் ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கு பணியாற்ற உள்ள நடுவர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கள நடுவர்களாக ரிச்சர்ட் கெட்டில்பரோ, ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் செயல்பட உள்ளனர். மூன்றாம் நடுவராக ஜோயல் வில்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். போட்டியின் ரெஃப்ரியாக ஆண்டி பைகிராஃப்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.