வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (09:49 IST)

மகளுடன் செல்ஃபி - மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய தோனி

தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ள கேப்டன் மகேந்திர சிங் தோனி மகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

 
கேப்டன் தோனி கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி தனது நீண்ட நாள் தோழியான சாக்‌ஷியை மணந்தார். கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜீவா என்று பெயரிடப்பட்டது.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தோனி தனது மகளை கூட பார்க்காமல் இருந்தார். உலகக் கோப்பை போட்டித் தொடர் முடிந்த பிறகே, தனது மகளை பார்த்தார்.
 

 
சிறிது நாட்களுக்கு தோனி தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தார். பிறகு அவரது மனைவி சாக்‌ஷி முதன் முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 
இந்நிலையில், நேற்று தனது மகளின் முதல் பிறந்த தினத்தை கொண்டாடிய தோனி, அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.