1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (13:40 IST)

கோலிக்கு இதுதான் கடைசி சான்ஸ்.. சச்சின் சாதனையை முறியடிப்பாரா? – ரிக்கி பாண்டிங் பதில்!

Virat Kohli
தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டிகளில் சச்சினின் உலக சாதனையை கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்தியாவில் நடந்து வரும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகின்றது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றியுடன் போட்டி கணக்கை தொடங்கியுள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மூவரும் டக் அவுட் ஆனபோதும் விராட் கோலி – கே எல் ராகுல் பார்ட்னர்ஷிப் அணியை வெற்றியை நோக்கி செலுத்தியது.

இந்த உலக கோப்பை ஒருநாள் போட்டிதான் விராட் கோலிக்கு கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம். பின்னர் அவர் ஓய்வை அறிவிக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. அதற்குள் அவர் சச்சின் உலக சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் டெண்டுல்கர் அடித்த 49 சதங்களே இதுவரை ஒரு வீரர் சர்வதேச போட்டிகளில் அடித்த அதிகபட்ச சதமாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் விராட் கோலி 47 சதங்களுடன் உள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரிக்க் பாண்டிங் “அவர் செய்வார் என்று நம்புகிறேன். நிச்சயமாக இந்த உலக கோப்பையில் 2 சதங்கள் வீழ்த்தி டெண்டுல்கர் சாதனையை அவர் சமன் செய்ய முடியும். 3 சதங்கள் அடிப்பாரா என்பது வேறு விஷயம். யாருக்கு தெரியும் இதுவே கோலியின் கடைசி உலக கோப்பையாகவும் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K