1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (19:32 IST)

இந்திய கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை ரூ.5997 கோடிக்கு வாங்கிய நிறுவனம்

viacom 18
இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை viacom 18  நிறுவனம் சுமார் ரூ.5997 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சர்வேச கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இந்திய கிரிக்கெட் அணி வலம் வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முக்கிய போட்டிகளில் பல திறமையான வீரர்களுடன் விளையாடி வருகிறது.

அத்துடன் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்களும் அதிகம் என்பதால், இந்திய கிரிக்கெட் அணி மற்ற நாட்டு அணிகளுடன் விளையாடும்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியை டிவி, ஆப்  மூலம் கண்டு களிப்பர். 

இந்த நிலையில், அடுத்த  ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை வயகாம்18 (viacom 18) என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை  சுமார் ரூ.5997 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.