ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:37 IST)

பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இந்த இடத்தில் சறுக்கினோம்… தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது.  அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த நிலையில் நிலைத்து நின்ற டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் போராடி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி வரை தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய பின்வரிசை பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி இலக்கை எட்டினர்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா “ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் முதல் 10 ஓவர்களில் நாங்கள் சரியாக விளையாடவில்லை.  24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தபின்னர் இலக்கை நிர்ணயிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால் மில்லர் சிறப்பாக விளையாடினார்.  எங்களுக்கு சில கடினமாக வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதை நாங்கள் கோட்டை விட்டோம். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் டிகாக் ஒரு லெஜண்ட்டாக அறியப்படுவார்” எனப் பேசியுள்ளார்.