வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 17 ஜூலை 2023 (14:30 IST)

இந்திய அணிக்கு டிராவிட்டுக்கு பதில் புதிய பயிற்சியாளர்… பின்னணி என்ன?

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடர் முடிந்ததும் அடுத்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் 2 டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் பிற பயிற்சி குழு ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக லஷ்மண் தலைமையிலான குழு இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.