வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (20:23 IST)

டி-20 உலகக்கோப்பை; வங்கதேச அணி அபார வெற்றி!

டி-20 உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.

பி – பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூ கினியா அணி எதிராக வங்கதேச அணி மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  பேட்டிங் செய்த நியூ கினியா அணியினர் 92 ரன்களில் சுருண்டனர். எனவே வங்காள தேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.