T-20 கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி அமைப்பு நடத்தும் டி-20 உலகக் கோப்பை கிரிக்ககெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது,சூப்பர் 12 சுற்றுக்கு 12 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் மோத வேண்டும்,
இந்த பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் மட்டும்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இன்று சினியில் நடக்கும் போட்டியில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவவே ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருந்த வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், அயர்லாந்தை வீழ்த்திய தகன் சனகா தலைமையிலான இலங்கையும் மோதும் போட்டி மழை குறுக்கிடாமல் இருந்தால் பரபரபாக இருக்கும் எனத் தெரிகிறது.
இரு அணிகளும் இதுவரை19 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து 10 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை 8 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
Edited by Sinoj