வியாழன், 19 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (08:51 IST)

தரவரிசையில் இரண்டு நாட்கள் மட்டும் முதல் இடம்…. சறுக்கிய சூர்யகுமார் யாதவ்!

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நடந்த அனைத்து டி 20 தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சூர்யகுமார் சிறப்பாக செயல்பட்டார். இதன்  மூலம் பேட்ஸ்மேன்களுக்கான டி 20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் விராட் கோலிக்குப் பிறகு நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வீரராக சூர்யகுமார் யாதவ் உருவாகியுள்ளார்.

இந்நிலையில் இப்போது முதல் இடம் மற்றும் இரண்டாம் இடத்துக்கு பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சூரயகுமார் யாதவ் முதல் இடத்துக்கு முன்னேறினார். ஆனால் மூன்றாவது போட்டியில் 8 ரன்களில் அவுட் ஆனதால் அவரின் புள்ளிகள் குறைந்து மீண்டும் இரண்டாம் இடத்துக்கு சறுக்கியுள்ளார்