1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (20:21 IST)

மீண்டும் சென்னை அணியில் இடம்பிடித்த சுரேஷ் ரெய்னா?

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில்  சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெறாத நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் சென்னை அணிக்குத் திரும்புவார்  எனத் தகவல் வெளியாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த 15வது ஐபிஎல் தொடரில், சென்னை அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.  சென்னை அணியில் அனுபவ வீரர்களான மொயின் அலி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இப்போட்டியில் இடம்பெறவில்லை. அதனால் தான் சென்னை அணி தோற்றதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் லண்டன் சென்றுள்ள தோனி, மற்றும் ரெய்னா இருவரும்  நேரில் சந்தித்துப் பேசியதாகவும், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா மீண்டும் சென்னை அணியில் இணைந்து விளையடவுள்ளாகவும் தகவல் வெளியாகிறது.