இந்தியாவை வெற்றிப்பெற ரசிகர்களிடம் ஆதரவு கேட்கும் தரங்கா


Abimukatheesh| Last Updated: புதன், 16 ஆகஸ்ட் 2017 (17:53 IST)
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இலங்கை தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஒருநாள் தொடரில் வெற்றிப்பெற ரசிகர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் தரங்கா.

 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இந்திய அணி டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்து 5 போட்டிகள் ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
 
ஒருநாள் போட்டி தொடரில் கட்டாயம் வெற்றிப் பெறுவோம் என இலங்கை அணி கேப்டன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தரங்கா கூறியதாவது:-
 
இலங்கை அணிக்கு கடினமான பாதையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அணி ஒருநாள் தொடரில் நிச்சயம் வெற்றிப்பெறும். ஆனால் அதற்கு ரசிகர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கை தேவை. அதனால் ரசிகர்கள் அமைதியாக இருப்பது அவசியம் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :