ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (20:13 IST)

இந்திய அணியின் தேர்வுக்கு குழு தலைவராக சுனில் ஜோஷி தேர்வு..

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் இந்திய வீரர் சுனில் ஜோஷி, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில், அவரது தலைமையிலான தேர்வுக் குழுவும் கலைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது புதிய தேர்வுக் குழு தலைவராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐயிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்விந்தர் சிங், பரன்ஜாபே, தேவாங் காந்தி, சரண் தீப், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குழுவினர் வருகிற மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள தென் ஆஃப்ரிக்கா அணிக்கு எதிராக இந்தியா மோதவுள்ள போட்டியில், இந்திய அணியை தேர்வு செய்யவுள்ளனர்.