1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2016 (13:29 IST)

இலங்கை கிரிக்கெட் வீரர் கவலைக்கிடம்: பயிற்சி ஆட்டத்தில் விபரீதம்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சியின் போது தலையில் பந்து தாக்கியதில் இலங்கை வீரர் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.


 
 
இங்கிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 1 டி20 போட்டியில் விளையாட இருக்கும் இலங்கை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது தினேஷ் சண்டிமால் அடித்த பந்து கவுஷல் சில்வாவின் தலையை தாக்கியது.
 
பந்து தலையை தாக்கியதும் கவுஷல் சில்வா உடனடியாக மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக கண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
இலங்கை அணிக்காக 24 போட்டிகளில் விளையாடிய கவுஷல் சில்வா 404 ரன்கள் எடுத்துள்ளார். இதேப்போல் தான் ஆஸ்திரேலிய வீரர் பிலிப்ஸ் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி அவர் மரணமடைந்த சம்பவம் நடந்தது. அதனை சிட்னி துயரச்சம்பவம் என கூறும் அளவுக்கு கிரிக்கெட் உலகில் அந்த மரணம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இலங்கை வீரர் தற்போது பந்து தாக்கியதால் கவலைக்கிடமாக இருப்பதால் கிரிக்கெட்டில் உலகில் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.