1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (17:28 IST)

தில்ஷன் அபார சாதனை; 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் பட்டியலிலும் இணைந்தார்

இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷன் 10ஆயிரம் ரன்கள் கடந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
 

 
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில், தில்ஷன் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அந்த போட்டியில், தில்ஷன் 55 ரன்கள் எடுத்திருந்தபோது 10 ஆயிரம் ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இணைந்தார். மொத்தம் தில்ஷன் ஒருநாள் போட்டிகளில் 10,007 ரன்கள் எடுத்துள்ளார்.
 
இலங்கை வீரர்களில் 10 ஆயிரம் ரன்னைக் கடந்த 4-வது இலங்கை வீரர் என்ற பெருமையை தில்ஷன் பெற்றார். இதற்கு முன்னதாக, குமார் சங்கக்கரா, ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே ஆகிய மூன்று பேரும் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
 
அதேபோல் உலகளவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 11ஆவது வீரர் என்ற பெருமையையும் தில்ஷன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (463 ஆட்டங்கள்) 18,426, குமார் சங்ககரா (404 ஆட்டங்கள்) 14,234, ரிக்கி பாண்டிங் (375 ஆட்டங்கள்) 13,704, சனத் ஜெயசூர்யா (445 ஆட்டங்கள்) 13,430, மஹேலா ஜெயவர்தனே (448 ஆட்டங்கள்) 12,650, இன்ஷாமம் உல்-ஹக் (378 ஆட்டங்கள்) 11,739, ஜாக் காலிஸ் (328 ஆட்டங்கள்) 11,579, சவுரவ் கங்குலி (311 ஆட்டங்கள்) 11,363, ராகுல் திராவிட் (344 ஆட்டங்கள்) 10,889, பிரையன் லாரா (299 ஆட்டங்கள்) 10,405 ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.