வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Geetha priya
Last Modified: ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (15:38 IST)

ஐபிஎல் 7 - ஐக்கிய அரபு எமிரேட்சை தேர்வு செய்தது ஏன்?

உலகெங்கும் உள்ள பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஐபிஎல் போட்டிகள் விரைவில் துவங்கவுள்ளன. 
 
இம்முறை 7 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாடாளுமன்ற  தேர்தல் காரணமாக முதற்கட்டமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது.
 
அங்குள்ள ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் 20 போட்டிகள் நடைபெறுமென தெரிகிறது. இரண்டாம் கட்டமாக பிற போட்டிகள்  மே 2 ஆம்  தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.
 
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த ஒப்புதல் அளித்துள்ள விளையாட்டு அமைச்சகம், வழக்கமாக  கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்  வெளி நாடுகளை விட்டுவிட்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது ஏன்? என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பியது.
 
இதுதொடர்பாக பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டிக்கு விளையாட்டு அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், 
 
ஐபிஎல் போட்டியை நடத்த பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சை தேர்ந்து எடுத்தது ஏன் என்பது விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது