புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 மே 2021 (16:57 IST)

இங்கிலாந்து நியுசிலாந்து டெஸ்ட் … பார்வையாளர்களை அனுமதிக்க முடிவா?

நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் 18000 ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக கிரிக்கெட் மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல்தான் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் 10 ஆம் தேதி டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. அந்த பகுதியில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால் தினம்தோறும் 18000 ரசிகர்களை போட்டியைக் காண அனுமதிக்க உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டியைக் காண வருபவர்கள் அனைவரும் 24 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழோடு வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.