வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (09:32 IST)

அவர் இந்தியாவுக்காக பல ஆண்டுகள் விளையாட வேண்டும்… ஹர்பஜன் சிங் பரிந்துரைக்கும் இளம் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியில் வளரும் நட்சத்திரமாக உருவாகி வருகிறார் சுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுப்மன் கில் இப்போது இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரராக உள்ளார். இந்நிலையில் அவர் இந்திய அணியின் எதிர்காலமாக இருப்பார் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள ஹர்பஜன் “கில் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். எப்போதும் தன்னை முன்னேற்றிக்கொள்ளும் முனைப்புடன் ஆடுபவர். அவரை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. அவர் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் ஆடவேண்டும் என்பதே என் ஆசை. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அவரை நாங்கள் எங்கள் வீட்டுப் பையனாகவே பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.