1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (16:14 IST)

நேற்றைய போட்டியில் சச்சினின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

நேற்றைய போட்டியில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார்.

நேற்றைய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்துள்ளார். அவர் நேற்றைய போட்டியில் 130 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 1998 ஆம் ஆண்டு சச்சின் 127 ரன்கள் விளாசினார். அதுவே இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக இருந்தார். அவரின் இந்த 24 ஆண்டுகால சாதனையை நேற்று கில் முறியடித்துள்ளார்.