வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:32 IST)

”அந்த காரியத்தை நான் செய்யவே இல்லை”.. குமுறும் சிஎஸ்கே வீரர்

சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஆபாச படங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம்,சில மர்ம ஹேக்கர்கள் ஆபாச படங்களை பதிவிட்டுள்ளனர். இதை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.

இந்நிலையில் இது குறித்து அவர், தனது டிவிட்டர் பக்கத்தில், எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட ஆபாச புகைப்படங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது டிவிட்டர் அக்கவுண்ட் கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து எனது இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டர் பக்கம் எனக்கு மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்க நாளாகி வருகிறது.

இது போன்ற சமயங்களில் இன்ஸ்டாகிராம் வேகமாக செயல்பட வேண்டும். ஆனால் அதிக நாட்களை எடுக்கிறது” என பதிவு செய்துள்ளார்.