வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (08:01 IST)

ஷாகின் அப்ரிடிக்குக் கேப்டன் பதவி கொடுத்திருக்கக் கூடாது… மாமனார் ஷாகித் அப்ரிடி கருத்து!

உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், தேர்வுக்குழு தலைவர் இன்ஸமாம் உல் ஹக் மற்றும் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் ஆகியோர் பதவி விலகினர்.

அதை தொடர்ந்து பாகிஸ்தான் டி 20 மற்றும் ஒருநாள் அணிக்குக் கேப்டனாக ஷாகீன் அப்ரிடியும், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். இப்போது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் தோற்று பரிதாபகரமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய மருமகனான ஷாகீன் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள ஷாகித் அப்ரிடி “முகமது ரிஸ்வானின் உழைப்பு குறிப்பிடத்தக்கது. அவர் எப்போதும் தன்னுடைய ஆட்டத்தில் கவனமாக இருந்தார். அவர் மிகச்சிறந்த போராளி. பாபர் ஆசாமுக்குப் பிறகு அவருக்குதான் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஷாகீன் அப்ரிடிக்கு தவறுதலாக தரப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.