1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (11:45 IST)

என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ் அதுதான்.. கோலியைப் பாராட்டிய ஷாகீன்!

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். அந்த வகையில் இப்போது உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

தற்போது அவர் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கோலியைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அவர் “என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்றால் அது 2022 ஆம் ஆண்டு எங்களுக்கு எதிராக கோலி அடித்த 82 ரன்கள் ஆட்டம்தான்.” எனப் புகழ்ந்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி அதல பாதாளத்தில் இருந்து மீண்டெழுந்து கடைசிப் பந்தில் வெற்றியை ருசித்தது. அந்த போட்டியில் தொடக்கத்தில் விக்கெட்கள் விழுந்ததால் மந்தமாக ஆடிய கோலி, ஒரு கட்டத்துக்குப் பின்னர் அதிரடியில் புகுந்து 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து போட்டியை வென்று கொடுத்தார். சச்சின் உள்ளிட்டவர்கள், தான் பார்த்த மிகச்சிறந்த டி 20 இன்னிங்ஸ் இதுதான் என பாராட்டினர் கோலியின் அந்த மாயாஜாலா ஆட்டத்தை.