Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோல்வியை நோக்கி இந்தியா: 72 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்

தோல்வியை நோக்கி இந்தியா: 72 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்


Caston| Last Modified ஞாயிறு, 18 ஜூன் 2017 (20:42 IST)
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் திணறி வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து வருவதால் இந்தியா தோல்வி முகத்தில் உள்ளது.

 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை நாலா புறமும் பறக்க விட்டனர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 338 ரன் குவித்து இந்தியாவுக்கு 339 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.
 
இதனையடுத்து கடினமான இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்ட ஒருவர் பின் ஒருவராக முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நடையை கட்டினர்.
 
இந்தியாவின் பேட்டிங் வரிசையை ஒட்டுமொத்தமாக சீர் குலைத்தார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமிர். கேப்டன் விராட் கோலி, தவான், யுவராஜ் சிங், தோனி, ஜாதவ் என அடுத்தடுத்து ரோகித் ஷர்மாவை தொடர்ந்து அவுட் ஆகினர்.
 
இந்திய அணி 17 ஓவரில் 72 ரன்னில் 6 விக்கெட்டை இழந்து திணறியது. பாகிஸ்தான் தரப்பில் அமிர் 6 ஓவர் போட்டு 2 மெய்டன் மற்றும் 3 விக்கெட்டை எடுத்துள்ளார். ஷதாப் கான் 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :